Saturday, October 25, 2014

லுமோசிட்டி: ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் மனப்பயிற்சிகள் அறிவுத்திறனை அதிகரிக்க உதவுமா?

 

லுமோசிட்டி பற்றி சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அறிவாற்றல் பயிற்சி குறித்த வலைத்தளம் (Website).  சரி லுமோசிடியில் அப்படி என்னதான் இருக்கிறது? லுமோசிட்டி ஒருவருக்குத் தேவையான அறிவுத்திறன் குறித்து பயிற்சியளிக்கும் (cognitive-training) விளையாட்டுக்களின் தொகுப்பு (series of games)  மற்றும் மனப்பயிற்சிகள் (mental exercises).

லுமோசிட்டி, கலிபோர்னியா மாநிலம், சான்பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள ஒரு இணையதள நிகழ்நிலை (ஆன்லைன் online) அறிவாற்றல் திறன் பயிற்சியளிக்கும் (cognitive-training) நரம்பியல் ஆய்வு நிறுவனம் (neuro science research lab.) ஆகும். குணால் சர்கார் (Kunal Sarkar), மைக்கேல் ஸ்கான்லோன் (Michael Scanlon) மற்றும் டேவிட் ட்ரெஷர் (David Drescher) என்ற மூவர் கூட்டணி லுமோஸ் லாப் என்ற லுமோசிட்டி நிறுவனத்தை 2005 ஆம் ஆண்டு துவக்கியது; லுமோசிட்டி.காம் வலைத்தளம் 2007 முதல் செயல்படுகிறது; லுமோசிட்டி மொபைல் அப்ளிகேஷன்கள் பத்து முதல் இருபத்தைந்து மில்லியன் சந்தாதார்களால் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன என்கிறது புள்ளி விபரம்.

லுமோசிடியின் நாற்பதுக்கும் மேற்பட்ட அறிவாற்றல் சார்ந்த விளையாட்டுக்களுக்கான வடிவமைப்பு இவ்வித  கருத்தாக்கங்களினால் (concepts) அமைந்துள்ளன:  வேகம் (speed), நினைவாற்றல் (memory), கவனம் (attention), வளைந்து கொடுக்கும் தன்மை அல்லது இணக்கமுடைமை (flexibility) மற்றும் சிக்கல் தீர்வுத் திறன் (problem solving) என்பனவாகும். சவால்களும் (challenging) வேடிக்கைகளும் (fun) நிறைந்த அறிவுத்திறன் சார்ந்த (mental ability) இந்த விளையாட்டுகள் நரம்பியல் விஞ்ஞானிகளால் (neuro scientists) வடிவமைக்கப்பட்டுள்ளதாக லுமோசிடி வலைதளம் சொல்கிறது. தினமும் பத்து நிமிடங்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்துவோமானால் நமது மூளையின் செயல்திறன் அதிகரிக்குமாம்.  மூளையின் செயல்திறனை அதிகரிக்க விளையாட்டுகளை வடிவமைத்தவர்களில் ஒருவரான டாக்டர் கோக்ஹேன் "நாம் நம் மூளையை ஒவ்வொரு முறையும் சவால்களுக்கு உட்படுத்தும் போதும் அதன் செயல்திறன் மாறுகிறது!" என்று கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக கவனம் (attention)  என்ற பகுதியில் உள்ள விருப்பத் தேர்வுகள் (choices) இவை: உற்பத்தித் திறன் மேம்பாடு (increased productivity); வேலையில் (அல்லது வீட்டில்) செம்மை மற்றும் துல்லியம் (precision) ; கவனத் தடங்கல் (distraction); புதிதாகக் கற்கும் ஒன்றில் ஒருமுகப்படுத்தும் திறன் (focusing); நாள் முழுவதும் ஈடுபாட்டுடன் (concentration) தொடர்ந்து செயலாற்றும் திறன் என்பன.

லுமோசிட்டியில் தற்போது அறுபது மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளார்களாம்; நாள்தோறும் இந்த எண்ணிக்கை ஏறுமுகத்தில் உள்ளதாம். லுமோசிட்டி தனி மனிதருக்குரிய பயிற்சித் திட்டம் (personalized) - இங்கு சந்தாதாரர்களால் வரையறுக்கப்பட்ட (subscriber defined) மனப்பயிற்சிகளை முதன்மைப்படுத்துகிறார்களாம்.

வரையறுக்கப்பட்ட வைத்திய நிபந்தனைகள் (medical conditions) மற்றும் வைத்திய சிகிச்சை பெறும் சூழலில் (clinical environment) மேற்கொள்ளப்பட்ட அறிவாற்றல் சார்ந்த பயிற்சிகளால் விளையும் பலன்கள் (benefits) பற்றிய பல நரம்பியல் ஆய்வுகள் (neurological researches) ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவாம் (contradicting). பலன்கள் பற்றிய ஆய்வுகள் சாதக பாதகமான முடிவுகளையே காட்டுகின்றனவாம்.

புற்று நோயுற்ற குழந்தைகளுக்கு (childhood cancer) லுமோசிட்டி மனவாற்றல் பயிற்சியளித்து (training with Lumosity) அவர்களுடைய மூளை செயல்பாடுகள் (corresponding increases in brain activity) மற்றும்  பெருமூளை (pre-frontal cortex) செயல்திறன் பற்றி ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University) டாக்டர்.ஷெல்லி கேஸ்லர் குழு (Dr. Shelli Kesler and colleagues) ஒரு ஆய்வினை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகள் சாதமானவை தானாம் : மேம்பாடுடைய அறிவாற்றல் செயல்பாடுகள் (improved cognitive performance), இணக்கமுடன் கூடிய அறிவாற்றல் (cognitive flexibility); சொற்கள் (verbal) மற்றும் காட்சி (visual) குறித்த நினைவாற்றல் அளவீடுகள் (declarative memory scores) எல்லாம் லுமோசிட்டிக்கு வலுவூட்டுகின்றன.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் (University of New South Wales) உளவியல் அறிஞர் (Psychologist) மாரிஸ் ஃபின் (Maurice Finn) மற்றும் ஸ்கை மக் டொனால்ட் (Skye McDonald) என்போர் மிதமான புரிவுத் தடங்கல் (mild cognitive impairment (MCI)  நோயாளிகளுக்கு அளித்த லுமோசிட்டி பயிற்சிகளால் அவர்களுடைய தடுத்தியக்கும் ஆற்றல் (controls) தழுவிய தளராத கவனத்திறன்களைச்  (sustained attention) செம்மைப்படுத்தியுள்ளதாம்.

லுமோசிட்டி தயாரிப்பாளர்களின் மென்பொருள் உபகரணங்கள் (software gadgets) குறித்து எழுப்பும் கோரிக்கைத் (claims) தகுதிகளுக்கு ஆதரவாக அறிவியல்பூர்வமான சான்றுகள் (scientific evidences) எதுவுமில்லை என்பது பரவலான ஆய்வு முடிவுகள். லுமோசிட்டி போன்ற மென்பொருள் உபகரணங்கள் நினவாற்றலை அதிகரிக்கும் என்பதற்கோ அல்லாது போனால் அறிவாற்றல் இழப்பு (dementia) போன்ற நோய்கள் பீடிக்கும் என்பதற்கோ போதிய சான்றுகள் இல்லை.

இந்தப் பதிவு லுமோசிட்டி பற்றிய விளம்பரம் இல்லைஅல்ல. இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டவை இணையத்தில் திரட்டிய தகவல் மட்டுமே. இவற்றை நிபுணர்கள் கருத்தாகக் கொள்ள வேண்டாம். இவை குறித்து ஏதேனும் ஐயமிருப்பின் தக்க நிபுணர்களின் உதவியினைக் கோரலாம்.

மேற்கோள் பட்டியல்
  1. Does a brain workout work? Neha Bhayana Times of India http://timesofindia.indiatimes.com/home/science/Does-a-brain-workout-work/articleshow/33981515.cms
  2. Lumosity. Wikipedia http://en.wikipedia.org/wiki/Lumosity
  3. Lumosity App Review http://essentialtechtips.com/77
  4. Lumosity By Tony Hoffman PC Magazine http://www.pcmag.com/article2/0,2817,2400859,00.asp
  5. Lumosity is like a gym for your Brain by Oscar in Notagrouch http://notagrouch.com/lumosity-is-like-a-gym-for-your-brain/
  Youtube 
Lumosity.com - "Why I Play" - Emily 



 Lumosity's Mike Scanlon On Exercising The Brain | Founder Stories by TechCrunch

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...