Thursday, September 21, 2017

அப்பச்சிமார் காவியம்: அப்பச்சி மாரய்யன் சகோதரர்கள் கதை


ஆசிரியர் : புலவர் செ. இராசு, வெளியீடு : டாக்டர் சி. மயிலேறு ரவீந்திரன், 70, டாக்டர்ஸ் லே-அவுட், சம்பத்நகர், ஈரோடு – 638 011, பக். : 136, விலை ரூ. 75/-.

கொங்கு 24 நாடுகளில் ஒன்றான வாழவந்தி நாட்டுப் பிள்ளைக்கரையாற்றூர் எனும் ஊரில் வேட்டுவர் குலத்தில் பிறந்தவர்கள் அப்பச்சி மாரய்யன் மற்றும் அவரது நான்கு சகோதரர்கள். இவர்களுக்கு 70 ஆண் மக்கள். இந்த 70 பேருக்கும் அதே குலத்தில் பிறந்த 70 பெண்களை மணம் முடிக்கும் தருணத்தில் நடக்கும் போரில் அப்பச்சி மாரய்யன் குடும்பத்தினர் அனைவரும் வீரமரணம் அடைகின்றனர். அப்பச்சி மாரய்யன் தெய்வத்தன்மை அடைகிறார். பின்னர் இது அப்பச்சிமார் காவியமாக உருப்பெற்று விளங்கி வருகிறது. 354 செந்தமிழ்க் கவிதைகளில் பல நூற்றாண்டுக் காலம் ஓலைச் சுவடியில் இருந்த இக்காவியத்தைக் கல்வெட்டு அறிஞர் புலவர் செ. இராசு அவர்கள் அச்சேற்றி நூல் வடிவில் கொணர்ந்திருக்கிறார். இது ஒரு பெரிய, அரிய முயற்சி. வேட்டுவர் சமுதாயப் பெருமைகள் கூறும் இந்நூலில் 153 வேட்டுவர் சமூகக் குலங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...