Thursday, December 8, 2016

நெருங்காதே நீரிழிவே! 1 டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

nn
சமீபத்தில் டாக்டர் விஜயராகவன் அவர்களைச் சந்தித்தேன்.
நோ நான்சென்ஸ் டாக்டர்’ கட்டுரையைப் படிச்ச வாசகர்கள் இன்னிக்கும் அதைப்பத்திக் கேட்கறாங்க” என்றேன்.
அப்படியா? என்ன மாதிரியான கேள்விகள்?”
டயபடீஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துக்கொண்டு சமாளிக்கலாம், ஆனால் சரிப்படுத்த முடியாதே? ஆனா நீங்க உங்க கட்டுரையில் சரியாகிவிட்டது என்று சொன்னதை நம்ப மாட்டேங்கிறாங்க” என்று ஆரம்பித்தேன்.
ஏன் நாம சேர்ந்து இதைப் பத்தி எழுதி ஒரு நல்ல விழிப்புணர்ச்சியைக் கொண்டு வரக்கூடாது?”
குட் ஐடியா டாக்டர். நம்ம டிஸ்கஷனை அப்படியே எழுதிடலாம்.”
நீங்க கேட்ட கேள்விக்குப் பதில்” என்று டாக்டர் என்னிடம் ஒரு படத்தைக் காண்பித்து இந்த யானைக்கு எவ்வளவு கால்கள்?” என்றார்.
யானைக்கு நான்கு கால்கள்தானே என்று சந்தேகத்துடன் படத்தைப் பார்த்தேன். நான்கா, ஐந்தா என்று குழம்பி, இது வெறும் இல்யூஷன்” என்றேன்.
ஆமாம். நாம பார்க்கிறத பொறுத்துதான் எல்லாமே. உலகத்தில டிவிட்டர், கூகிள் நேத்து வந்த புது ஐபோன்வரை எவ்வளவோ விஷயங்களைப் பார்த்து வியக்கிறோம். என்றாவது நம் உடலைப் பார்த்து வியந்திருக்கிறோமா?
கம்ப்யூட்டர் புரோக்ராம் மாதிரி நம் உடல் நூறு வருஷம் எந்த நோயும் இல்லாம வாழ புரோக்ராம் செய்யப்பட்டது. உடல் ஆரோக்கியமாகவும் அதேசமயம் தன்னைத்தானே குணப்படுத்திக்கவும் சூட்சுமங்கள் அந்த புரோக்ராமிலேயே அடங்கியிருக்கு!”
அட!”
ஆனா, கம்ப்யூட்டர் புரோக்ராமை வைரஸ் தாக்கறா மாதிரி இன்னிக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன், கொழுப்புக் கோளாறுகள், தைராய்டு செயலிழப்பு, ஆட்டோ இம்யூன் குறைபாடுகள், புற்றுநோய், அல்சைமர் நோய், மறதி இன்னும் பல வியாதிங்க தாக்கிக்கொண்டு இருக்கு. இதெல்லாம் வியாதிகள் இல்ல! மாறி வரும் வாழ்க்கை முறையால் (லைஃப் ஸ்டைல்) நம்ம உடம்பு நமக்குச் சொல்லும் சமிக்ஞைகள். சுலபமாகப் புரிய, வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர் குழம்பிப்போய் எப்படி தப்புத் தப்பா செயல்படுமோ அதுபோல நம் உடலும் குழம்பிப் போக ஆரம்பிக்கிறது. இவை நம் உடல் நமக்குக் காண்பிக்கும் சிவப்பு சிக்னல்கள்.”
டாக்டர், அப்படினா மருந்து மாத்திரை எதுவும் வேண்டாமா? நீரிழிவு தன்னால சரியாயிடுமா?”
அப்படியில்ல. வைரஸ் வந்தால் கம்ப்யூட்டரை உடனே கிளீன் செய்து, அப்பறம் அந்த கம்ப்யூட்டரை ஒழுங்காக எப்படி மெயின்டென் செய்கிறோமோ, அதேபோல நம் உடலையும் பாதுகாக்கணும். ஆனா நாம் அப்படிச் செய்யறதில்ல என்பது தான் பிரச்னையே.”
உடம்புல காயங்களுக்கு மருந்து அவசியம் தானே!”
நிச்சயமா. நம் உடம்புல மூன்று விதமான காயங்கள் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில 3-T என்று சொல்லுவாங்க.Trauma, Toxin, Thought!
முதல் Tக்கு உதாரணமான நாம் விழுந்து அடிபட்டா ஏற்படும் வலி?”
கரெக்ட்.”
அடுத்த T நச்சுத்தன்மை, விஷம், பொல்யூஷன், புகை.”ஆமாம். அதனால்தான் நமக்குச் சில சமயம் ‘ஃபுட் பாய்சன்’ ஆகிறது.”
கடைசி-T, கவலை. குடும்ப, அலுவலக பிரச்னை, வியாபாரத்தில் நஷ்டம் அதனால வரும் மன உளைச்சல்.”
இந்த மூணு‘T’யில் ஏதாவது ஒன்ணு ஏற்பட்டாலும், உடனே நம் மூளை நம்மள காப்பாத்த முனைந்து, ஆபத்தை எதிர்த்து ஹீரோ போல சண்டை போட வேண்டுமா அல்லது வில்லன் போல ஓட்டம் பிடிக்கவேண்டுமா என்று முடிவு செய்யும்.”
ஆதி மனுஷன், இயற்கைச் சீற்றம், தொற்றுநோய், கொடிய விலங்குகளிடமிருந்து காத்துக் கொண்டு வாழ்ந்தான். ஆனால், இன்னிக்கு நவீன அண்ட்ராய்டு மனுஷன் கொடிய விலங்குகளிடமிருந்து சுலபமாகத் தப்பித்துப் பல கொடிய நோய்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறான்.”
ஆனா மருத்துவத் துறை முன்னேற்றத்தை மறுக்க முடியாதே?”
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, இன்றைய மருத்துவத்துக்கும் இரண்டு பக்கங்கள்!”
ஜூலை மாசம் கோவையில ஓரு விபத்து. ஒரு பெண்மணி அடிபட்டு ‘பிரெயின் டெட்’. அவங்க உடல் உறுப்புகளை ஆம்புலன்ஸில் போக்குவரத்தை நிறுத்தி விமான நிலையத்துக்குக் கொண்டு சேர்த்தாங்க.
“ஆமாம் டாக்டர் நானும் படித்தேன்.”
ஒரு சிறுநீரகம் கே.ஜி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை மியாட் மருத்துவமனைக்கும், 2 கண்கள் கோவை சங்கரா மருத்துவமனைக்கும், இருதய வால்வு சென்னை மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் அனுப்பி உடனே பொருத்திட்டாங்க. இதனால 6 பேருக்கு மறுவாழ்வு கிடைச்சுது. இது மருத்துவ வளர்ச்சியின் தி பிரைட்சைட். ஆனா ‘கிரானிக்’ அதாவது நாள்பட்ட கடுமையான நோய்களுக்கு நம் மருத்துவத்துறை முற்றிலும் தவறு செஞ்சு பல உயிர்களை அழிக்கிறது.”
விரிவா சொல்லுங்க டாக்டர்?”
இன்றைய தேதியில டயபடீஸ், இதயநோய், தைராய்ட் எல்லாம் விஜய், அஜித்போல பழக்கப்பட்ட பெயராயிடுத்து.”
இதுக்குதான் விதவிதமா மருந்துகள் இருக்கே?”
இருக்கு, ஆனால் நவீன மருத்துவம் இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு சொல்லாம, மேலும் மேலும் பெரிசாக்குது.”
கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்?”
டயபடீஸ் என்ற நீரழிவு, ஒபீஸ் என்ற உடல் பருமன் வளர்சிதைக் கோளாறால் ஏற்படுது. ஆங்கிலத்தில –Metabolic disorderன்னு சொல்லுவாங்க. உடலில் வளர்ச்சிக்காக ஏற்படும் வேதியியல் ரசாயன மாற்றங்கள்தான் – Metabolism. அதில் கோளாறு ஏற்பட்டால்?
ஒரு மரத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்க. இதில் எப்படிக் கோளாறு ஏற்படுது? முன்பு பார்த்த 3- Tநினைவு இருக்கிறதா?”
காயம், நச்சு, எண்ணங்கள்.”
இவைதான் வேர்கள். எது நடந்தாலும், எதிர் வினையாக பல ரசாயன மாற்றங்கள் அடுக்கடுக்காக ஏற்படுத்தும்.”
இதைத்தானே டாக்டர் ஹார்மோன் என்கிறோம்?”
ஆமாம். சக்கரை சாப்பிட்டா இன்சுலினும், அதிக மனஅழுத்தம் இருந்தா கார்டிசொல் போன்ற ஹார்மோன்களும் சுரக்குது.”
இவை எல்லாம் நம் உடம்புக்குத் தேவைதானே?”
எல்லாமே தேவைதான். ஆனா அதிகமானாலோ அல்லது குறைவானாலோதான் பல பிரச்னைகள் வரும். டயபடீஸ், உடல் பருமன், ஹைப்பர் டென்ஷன், தைராய்ட் என்று கிளைவிட்டு மரம் செழிப்பாக வளரும்.”
ஓ!”
நவீன மருத்துவம் கிளைகளை வெட்டுகிறதே தவிர மூலகாரணமான வேர்களை அப்படியே விட்டுவிடுகிறது. உடலியக்கத்தைச் சின்ன ரசாயனப் பொருளைக் கொண்டு, அதாவது மருந்து மாத்திரைகளைக் கொண்டு கட்டுப்படுத்த பார்க்கிறோம்.
நம் உடல் சீராக இயங்கக் கூடிய ஓர் அருமையான இயந்திரம். சைக்கிள் செயினில் அதிக எண்ணெய் போட்டால் செயின் கழண்டுவிடும். அதேபோல்தான் நம் உடலும். அதிக மாத்திரை எடுத்தால் ரிப்பேர் ஆகிவிடும்.
இன்னொரு உதாரணம் சொல்றேன். நம் உடல் கிச்சன் ‘சிங்க்’ மாதிரி. தண்ணீர் சுத்தமா இருந்தா சீராக வெளியேறும். ஆனா அதிக அழுக்கு சேர்ந்தா அடைத்துக்கொள்ளும். 3Tதான் அடைத்துக் கொள்ளும் அழுக்கு!”
அந்த அழுக்கை எப்படி அகற்ற வேண்டும் என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.
(தொடரும்)
–நன்றி கல்கி
Source: Balhanuman's Blog October 27, 2016 https://balhanuman.wordpress.com/2016/10/27/1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...